தெலுங்கு திரையுலகின் மீண்டும் ஒரு சூப்பரான படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிவருகிறது. இயக்குனர் சண்டூ மொண்டேத்தி இயக்கத்தில் ப்ரேமம் பட நடிகர்கள் இணையும் இந்த படத்தின் அறிவிப்பு விடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர்தான் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாக அர்ஜுனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் நாக சைதன்யாவின் 23வது படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
நாக சைதன்யாவின் 23வது படத்தை இயக்குனர் சண்டூ மொண்டேத்தி இயக்குகிறார். இயக்குனர் சண்டூ மொண்டேத்தி மற்றும் நடிகர் நாக சைதன்யா இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இதற்கு முன்பு மலையாள படமான ப்ரேமம் படத்தை தெலுங்கில் அதே பெயரின் எடுத்து முதன்முதலாக இணைந்தார்கள். அதன் பிறகு, சவ்யசாட்சி என்னும் படத்தில் இயக்குனர் சண்டூ மொண்டேத்தி மற்றும் நாக சைதன்யா இணைந்து பணியாற்றினார்கள். இந்நிலையில், நடிகர் நாக சைதன்யாவின் 23வது படத்திற்காக மீண்டும் இணைகிறார்கள்.
இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரு பன்னி வாஸ் தயாரிக்கிறார். நேற்று, இந்த படத்தை குறித்து படத்தின் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் ஒரு பெண்ணுடன் கலந்துரையாடுவதை விடியோவாக தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருந்தது. அனால், அந்த பெண்ணின் முகத்தை காட்டவில்லை. எனினும், அது சாய் பல்லவிதான் என உறுதிசெய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
