நயன்தாரா ஏன் தான் நடிக்கும் படங்களை விளம்பரம் செய்வது இல்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
தன் காதல் மனைவியான நயன்தாரா தன் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து பேசியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஒரு பட வாய்ப்பு தன்னை தேடி வரும்போதே நடிப்பதோடு சரி, விளம்பரம் செய்ய மாட்டேன் என தெளிவாக கூறிவிடுவார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாரா ஏன் அப்படி செய்கிறார் என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவிடம் இருக்கும் ஒரு சொத்து வேறு எந்த தென்னிந்திய நடிகையிடமும் இல்ல
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து 9skin என்கிற சரும கிரீம் நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். அந்த 9ஸ்கின் தயாரிப்புகள் அறிமுக நிகழ்ச்சி மலேசியாவில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய விக்னேஷ் சிவன் கூறியதாவது, ஏதாவது சரியானது என நம்பினால் தான் நயன்தாரா அதை விளம்பரம் செய்வார். பல நேரங்களில் அவர் தன் படங்களையே விளம்பரம் செய்வது இல்லை. படத்திற்கு தானாக விளம்பரம் வரும் என்று இல்லை. எதுவும் நல்லதாக இருந்தால் தானாக விளம்பரம் கிடைக்கும். அது தான் அவரின் நம்பிக்கை என்றார்.
நயன்தாராவை தேடி விளம்பர பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. ஆனால் அவர் குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டுமே விளம்பரம் செய்கிறார். அதற்கும் சேர்த்து தான் விளக்கம் அளித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். எங்களின் 9ஸ்கின் தயாரிப்புகள் குறித்து அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்பினார் நயன்தாரா. எங்களின் தயாரிப்புகளை முதலில் அவர் பயன்படுத்தினார் என்றார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவன் மேலும் கூறியதாவது, 9ஸ்கின் பிராண்டு அம்பாசிடராக வருவார், அது குறித்து பேசுவார், தயாரிப்புகளை விளம்பரம் செய்வார் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. 9ஸ்கின் டிசைன், பாட்டில், எழுத்து வடிவம், பேக்கேஜிங் என அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்தினார் நயன்தாரா. அவரின் செயலை பார்த்து எங்களுக்கு ரொம்ப இன்ஸ்பையரிங்காக இருந்தது என்றார்.
நயன்தாரா எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். நான் அவருடன் சேர்ந்து முதல் முறையாக வேலை செய்தபோது நயன்தாராவின் சின்சியாரிட்டியை பார்த்து வியந்தேன். மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்தார் என தன் காதல் மனைவி பற்றி பெருமையாக பேசினார் விக்னேஷ் சிவன். 9ஸ்கின் தவிர்த்து லிப் பாமும் விற்பனை செய்து வருகிறார்கள் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் என்பது குறிப்பிடத்தக்கது.
