உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் : மேலும் ஒருவர் கைது

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய மொரட்டுவ மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இதே சம்பவம் தொடர்பில் நேற்று அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

52 வயதான ஆசிரியர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version