தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் நேற்று(14) கூறியதாவது:
குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை(12) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா். எனினும், காயமடைந்தவா்களின் அண்மை விவரத்தை அவா்கள் வெளியிடவில்லை. மழை காரணமாக இம்மண்சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
