உலகளாவிய ரீதியில் வரலாற்றுச் சாதனை படைத்த தங்கத்தின் விலை

அமெரிக்கா – ஐரோப்பா இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று (21) தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்கள் என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தாண்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாக விடுத்துள்ள மிரட்டல், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கிரீன்லாந்து விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, வர்த்தகப் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

நேற்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் 4,730 டொலர்களாகக் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் 4,800 டொலர்களைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Exit mobile version