கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் இரண்டு யுவதிகளும் அலையில் இழுத்து செல்லப்பட்டு மீட்பு.

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாணந்துரை பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்களும் இரண்டு யுவதிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

கோணபால மற்றும் கலவான பிரதேசத்தைச் சேர்ந்த 25 மற்றும் 19 வயதுடையவ யுவதிகளும் மற்றும் 17 மற்றும் 23 வயதுடைய இளைஞர்களுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாணந்துறை கடற்கரையில் கடமையில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் நிமல்சிறி, பொலிஸ் கான்ஸ்டபிள் புஷபகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தேஷான் ஆகியோரினால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லாததால் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version