விகாரை மீது துப்பாக்கி சூடு – விகாராதிபதி தேரர் வேறு இடத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு பாதிப்பு இல்லை.

குருநாகல்
தொடம்கஸ்லந்த உடத்தபொல விகாரை மீது நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மதுராகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விகாரையின் விகாராதிபதி தேரர் கல்னாவே பஞ்னகித்தி
தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், தேரர் அப்போது விடுதியில் வேறு இடத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் விசாரணையில், ஸ்டன் Gun போன்ற துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version