மகப்பேறு இல்லாத ஒரு தம்பதி எதிர்கொள்ளும் சமூக மற்றும் இல்லறச் சிக்கல்களைச் சொல்லும் படமே இந்த ‘வெப்பம் குளிர் மழை.’
சிவகங்கையின் மாவிடுதிக்கோட்டையில் இருக்கும் பெத்தபெருமாள் – பாண்டி தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இருவருக்கும் இடையேயான இந்தத் தனிப்பட்ட பிரச்னையை எப்படி பூதாகரமான பிரச்னையாக சுற்றியிருப்பவர்கள் மாற்றுகிறார்கள், அது எப்படி ஒரு குடும்பத்தைப் பெரும் அழுத்தத்தில் தள்ளுகிறது என்பதைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.