தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கொளரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி, உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.
நேற்று (29) இரவு பெங்களூரில் வசித்து வந்த நந்தினி அவரது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளார்.
தவறான முடிவெடுப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், பெற்றோர் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், தான் திருமணத்துக்கு தயாராக இல்லை என்றும் எழுதப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இக் கடிதத்தை கைப்பற்றிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
