நடிகர் நாக சைதன்யா தனது தாயை பிரிந்து வாழ்வதற்கு இதுதான் குழந்தை பருவத்திலும், பள்ளி வாழ்க்கையிலும் தனது தாயின் முடிவுதான் தனது வாழ்க்கையை மாற்றியது என்பார் நாக சைதன்யா
டோலிவுட்டின் பிரபல நடிகர் நாக சைதன்யா, நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நாக சைதன்யாவின் தாய் யார் என்பது பலருக்கும் தெரியாது. அவரின் தாய் லட்சுமி டகுதி. ஆனால் நாக சைதன்யா தனது தாயிடம் இருந்து பிரிந்து தனது தந்தையுடன் வாழ்ந்தார்.
நாகர்ஜூனாவின் முதல் மனைவி லட்சுமி டகுபதி. இவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். நாகர்ஜுனாவுக்கும், லட்சுமிக்கும் கடந்த 1984-ல் திருமணம் நடந்தது. அவர்கள் இருவருக்கும் 1986-ல் நாக சைத்தன்யா பிறந்தார். ஆனால் நாக சைதன்யா பிறந்து 4 வருடங்களில் இவருவரும் பிரிந்துவிட்டனர்.
மேலும் 1990-ல் அவர்கள் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். விவாகரத்திற்கு பிறகு லட்சுமி டகுபதி தனது மகன் நாக சைதன்யாவுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 19 வயது வரை அவர் தனது தாயுடன் வசித்தார். இதை அவர் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.
குழந்தை பருவத்திலும், பள்ளி வாழ்க்கையிலும் தனது தாயின் முடிவுதான் தனது வாழ்க்கையை மாற்றியது என்பார் நாக சைதன்யா. தனது தாய் லட்சுமி மிகவும் நேர்மையானவர் என்றும், அவரிடமிருந்து பல விஷ்யங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
நாகர்ஜுனாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற லட்சுமி, சுந்தரம் மோட்டார்சின் கார்ப்பரேட் நிர்வாகியான சரத் விஜயராகவனை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட லட்சுமி, லட்சுமி இன்டீரியர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கணவன் மற்றும் மகனை பிரிந்து வாழ்ந்தாலும் தனது உரிமைகளை லட்சுமி விட்டுக்கொடுக்கவில்லை. நாக சைதன்யா – சமந்தா திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்த லட்சுமி, அவர்களின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்.
லட்சுமி டகுபதி இரண்டாவது திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அப்போது இரண்டாவது திருமணம் காரணமாக நாக சைதன்யா தனது தாயிடமிருந்து பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது குறித்து விளக்கமளித்த சைதன்யா, சினிமாவில் நடிப்பதால் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
சில நாட்களுக்கு பிறகு நாக சைதன்யா – சமந்தா திருமண உறவு முடிவுக்கு வர, நாக சைதன்யா தற்போது தனியாக வசித்து வருகிறார்.