துபாய் பறந்த நடிகர் விஜய்.. திடீர் பயணத்திற்கு காரணம் இதுதான்!
சில மாதங்களுக்கு முன், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். விஜயின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்தோர் இதனை கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் களம், சினிமா என அனைவரும் விஜயின் அரசியல் வருகையை குறித்து தான் சில மாதங்களாகவே பேசி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த அப்படத்தில் நடித்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
மேலும், டைம் ட்ரைவளை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சென்னை மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய் இப்படத்திற்க்காக கிளீன் ஷேவில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது.
இந்த நிலையில், துபாயில் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளது, அதில் நடிப்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் விஜய் தற்போது துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.