பாரம்பரிய முறைப்படி நடந்த வளைகாப்பு விழா.. ஆளே மாறிப்போன அமலா பால்.. இணையத்தில் போட்டோஸ் வைரல்!
சிந்துசமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பாலுக்கு முதல் படம் கைகொடுக்கவில்லை. மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.
கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
விஜய்யுடன் தலைவா, விக்ரம் ஜோடியாக தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யா ஜோடியாக வேட்டை, சூர்யாவுடன் பசங்க 2 என பிஸி நாயகியாக ரவுண்ட் அடித்தார்.
2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குனர் எல் விஜய், அமலா பால் இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
அதன் பின் மீண்டும் சினிமாவில் பிஸியான அமலாபால் கவர்ச்சியில் களமிறங்கி ரசிகர்களை மிரளவைத்தார்.
சிங்கிளாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்த அமலா பால், நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பர் ஜகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.
ஹனிமூன் கொண்டாடிவந்த அமலாபால் ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கர்ப்பகாலத்தில் தனது கணவருடன் மகிழ்ச்சியாக தருணங்களை கழித்து வந்த அமலா பால், தனது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது.
எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமலா பாலின் வளைகாப்பு விழா நடந்து முடிந்ததுள்ளது. கணவருடன் மகிழ்ச்சி பொங்க இருக்கும் தனது வளைகாப்பு புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமலா பால்.