ஈரான் அரசுத் தொலைக்காட்சி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு விடுத்த நேரடி எச்சரிக்கையில், “இந்த முறை தோட்டா இலக்கைத் தவறவிடாது” என்று குறிப்பிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மீது ஈரான் அதிர்ச்சியூட்டும் அச்சுறுத்தல்: “இந்த முறை தோட்டா இலக்கைத் தவறவிடாது” என எச்சரிக்கை.
- 2024-இல் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியைக் குறிப்பிட்டு, ட்ரம்ப் இன் காதை சுட்ட சம்பவத்தை குறிப்பிட்டு ஈரான் அரசுத் தொலைக்காட்சி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
பாரசீக மொழியில் (Farsi) அந்தப் படத்தின் கீழே, “இந்த முறை அது இலக்கைத் தவறவிடாது” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
பின்னணி: அமெரிக்கா ஈரானைத் தாக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இந்த நேரடி அச்சுறுத்தலையும் விடுத்துள்ளது. இது ட்ரம்ப் மீதான ஈரானின் மிக நேரடியான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
