சாதாரண தரப் பரீட்சை இம் மாதம் 17ஆம் திகதி

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 2025 (2026) பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருந்தால், இம் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3545 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version