இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகியது.
பேரணியில் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றிருந்தனர்.
கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஞா.சிறிநேசன், கௌரவ இ.சிறிநாத் ஆகியோரும், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
