கண்டியின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 6:00 மணி. முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4:00 மணி வலை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர சீர்த்திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் வெட்டு காரணமாக பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்:
அஸ்கிரிய, வேகிரிய, பல்லேமுல்ல, யட்டிஹலகல மற்றும் கொண்டதெனிய.
ரஜபிஹில்ல மற்றும் மெதவல சேவை நீர்த்தேக்கப் பகுதிகள்.
கஹவத்த, குருகொட, புலுகொஹதென்ன, கிராகடுவ,
கஹல்ல மற்றும் தெலம்புகஹவத்த.
நுகவெல, பலனகல, கலகெதர மற்றும் மாவத்தகம.
நீர் விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில், பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாகவும் அவதானமாகவும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
