கண்டி – கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணங்கள் சம்பவித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🛑மழைக்காலங்களிலும், பலத்த காற்று வீசும் போதும் மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்லும்போது நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
🛑நிலத்தில் ஒரு மின் கம்பி அறுந்து கிடப்பதைக் கண்டால், அது “நேரடி மின்சாரம்” (Live Wire) கொண்டதாக இருக்கலாம். அதை ஒருபோதும் நெருங்கவோ அல்லது தொடவோ முயற்சிக்காதீர்கள்.
🛑தரையில் நீர் அல்லது ஈரப்பதம் இருந்தால், மின்சாரம் வெகுதூரம் பாயக்கூடும். எனவே, அத்தகைய இடங்களைத் தவிர்க்கவும்.
🛑உங்கள் பகுதியில் மின் கம்பி அறுந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக மின்சார சபையின் அவசர இலக்கத்திற்கு (1987) தகவல் தெரிவியுங்கள்.
