2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும்,
சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை முறையாக உள்வாங்கப்படாத 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களைச் சந்தாதாரர்களாகப் பதிவு செய்யப் புதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன்,
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை வழங்குவதில் புதிய ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
