குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில், பொதுமக்களுக்கு வரும் போலியான மின்னஞ்சல் செய்திகள் குறித்து, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Shani Abesekara. Director of the Criminal Investigation Department (CID), Colombo 07, Sri Lanka, NationWide Could, Protection 24/7) எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக, தனிநபர் அல்லது குழுவொன்றால் அண்மைக்காலங்களில் குருஞ்செய்திகள் வருவதனை அவதானிக்கமுடிகிறது.
இவ்வாறான மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
