‘தீகல சமன்’ என்பவரின் 02 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்


‘தீகல சமன்’ என அழைக்கப்படும் மஹாமாலகே அஜித் பெரேராவிற்கு சொந்தமான ரூபா 2 கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சொத்துக்கள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டவை என பொலிஸார் கூறியுள்ளனர்.

நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version