ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் மேற்கொண்ட இராணுவ தாக்குதல்களை கண்டித்து, “எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே” (No Blood for Oil) என்ற தொனிப்பொருளில் இன்று (06) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பலகைகளையும் ஏந்தியிருந்தனர்.

Exit mobile version