ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்குச் சென்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது வாசலில் நின்று விஜயை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின், கட்டியணைத்தார். தொடர்ந்து உள்ளே சென்ற விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்
அப்போது இருவரும் பொன்னாடை போர்த்தி, புன்னகைகளையும் பூங்கொத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். அப்போது திமுக மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த், விஜய் உடன் வந்தார்.
அரசியல் வரலாற்றில் பகை வளர்க்கமல் இத்தகைய முன்னெடுப்புகள், முன்னுதாரணமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
