மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது கட்டாயம்…!…!

தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை தலைவர் மஞ்சுளா குலரத்ன

போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கும், SLS சான்றிதழ் பெற்ற, தரப்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை தலைவர் மஞ்சுளா குலரத்ன தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பு இன்று (07) கொழும்பு 10, டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு மண்டபத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு

Exit mobile version