வந்த பண கஷ்டம், சொல்லாமல் வெளியே செல்லும். நமக்கு பணக்கஷ்டம் வருவது என்பது இயல்புதான். ஆனால் வந்த பண கஷ்டம் நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடக் கூடாது. கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்டான வழி, உடனடியாக கிடைத்துவிட்டால் வந்த பண கஷ்டம் வந்த வழி தெரியாமல் வெளியே சென்று விடும். ஆனால் சில பேருக்கு கஷ்டம் மட்டும் தான் வீட்டிற்குள் வரும். வந்த கஷ்டம் வாசலை விட்டு வெளியே செல்லவே செல்லாது. இதை விரட்டி அடிப்பதற்கு நாம் என்னதான் செய்வது. பணக்கஷ்டத்தை போக்குவதற்கு பணத்தை சம்பாதிக்க வேண்டும். விடாமல் கஷ்டப்பட வேண்டும். எப்படியாவது இந்த வறுமையை ஒழித்து கட்ட வேண்டும் என்று மனதார நினைக்க வேண்டும். இதை செய்தாலே பணக்கஷ்டம் நம்மை விட்டு விலகி விடும்.
இது முதல் வழி. இதை ஆழ மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர பணக்கஷ்டத்திலிருந்து வெளிவர சில தாந்திரீக பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அந்த வரிசையில் இரண்டு சுலபமான தாந்திரீக பரிகாரங்கள் இதோ உங்களுக்காக. முதல் பரிகாரமாக எவ்வளவு தான் பணக்கஷ்டம் இருந்தாலும் சரி, நமக்கு பணக்கஷ்டம் வந்துவிட்டதே என்று சோர்ந்து போகாமல் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமி தாயை மனதார நினைத்து, ‘எனக்கான பணம் எந்த தடையும் இல்லாமல் என் கையை வந்து சேரும்.
என் பண கஷ்டங்கள் தீரும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.’ இப்படி வாய் விட்டு சொல்ல வேண்டும். மனதில் நினைப்பது கிடையாது. வாய் விட்டு இந்த வார்த்தையை காலையில் மூன்று முறை சொல்லுங்கள். பணத்தடை விலகுமா? கைக்கு பணம் வருமா? கஷ்டங்கள் தீருமா என்ற சந்தேகம் ஒரு துளி கூட இருக்கக் கூடாது. நம்பிக்கையோடு பணம் வரும். கஷ்டம் தீரும் என்று வாய்விட்டு சொல்லும் போது, அதற்கு இருக்கக்கூடிய பாசிட்டிவ் வைப்ரேஷனை அடுத்தவர்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது.
நீங்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக அந்த பாசிட்டிவ் வைப்ரேஷனை உணர்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த நேர்மறை வார்த்தைகளில் அர்த்தங்கள். எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம். கணக்கு கிடையாது. ஆனால் ஒரு துளி சந்தேகம் இல்லாமல் வார்த்தைகள் உச்சரிக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு கொஞ்சமாக பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிலை வாசலுக்கு வெளியே வந்து விடுங்கள். உங்கள் வீட்டிற்கு உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டு, வெளியில் இருந்து அந்த பட்டை பொடியை லேசாக அப்படியே ஊதிவிட்டால், காற்றில் அந்த பட்டை பொடி உங்கள் வீட்டிற்குள்ளே பறந்து வரும். அதேபோல பணமும் உங்கள் வீட்டிற்குள் பறந்து வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பட்டை பொடியை வீட்டிற்குள் ஊதி விடுங்கள். மேல் சொன்ன வார்த்தைகளை உச்சரித்து விட்டு இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். அவ்வளவுதான். இதை செய்தாலே உங்களுடைய பண கஷ்டத்தில் பாதி தீர்ந்துவிடும்.
பிறகு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வெற்றி அடைய தொடர்ந்து உங்களுடைய உழைப்பை நம்பிக்கையை முதலீட்டாக வைத்தாலே போதும். உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.