தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் – பாக்யராஜ் வெற்றி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளை பெற்றார்.

40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் பாக்யராஜ் கூறுகையில், வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். எழுத்தாளர் சங்க தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version