மணிரத்னம் ஒரு மாதம் கழித்தே பாடலுக்கே ஓகே சொன்னார் – ஏ.ஆர்.ரகுமான்!

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது.

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் “இந்த படத்துக்காக தோடி உள்ளிட்ட எத்தனையோ ராகத்தில் பாடலும், இசையும் அமைத்து மணிரத்னத்திடம் போட்டு காண்பித்தேன்.

ஆனால் அவர் அதை ஏற்கவே இல்லை. சில விஷயங்களை கற்பனை செய்து, தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன். இடையிடையே சின்ன சின்ன அரபிக் டச் கொடுத்து இசையமைத்தேன்.

மணிரத்னத்திடம் போட்டு காட்டினேன். ஒரு மாதம் கழித்து அவர் ஓ.கே. என்றார். அப்படி இந்த படத்துக்கு பார்த்து பார்த்து இசை வடிவம் கொடுத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version