நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில்  லைகா நிறுவனம்  தயாரித்து வரும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் வடிவேலுவின் பிறந்தநாளான நேற்று சிறப்பு போஸ்டரை பரிசளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இவருடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் மேலும் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திலும் நடித்து வருகிறார்.
விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version