2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் துபாயில் இடம்பெற்ற இறுதி ஆசிய கிண்ண போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தனதாக்கிக் கொண்டது.
இதனை தொடர்ந்து தற்போது குறித்த ஆசிய கோப்பை, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
2022 கோப்பையை தவிர, 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பைகளையும் இலங்கை அணி வென்றுள்ளது.
குறித்த ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பைகளும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பைகள் கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 07 இல் மைட்லேண்ட் கிரசண்ட்டில் (Maitland Crescent)அமைந்துள்ள அதன் அருங்காட்சியகம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.