நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 78 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 300 மெகாவோட் மின்சாரம் அடுத்த வாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Exit mobile version