இம்முறை ரி20 உலகக் கிண்ணத்தில் ரில்லி ரெசொவ் முதல் சதத்தை விளாசியதன் மூலம் பங்களாதேஷுக்கு எதிராக சுப்பர் 12 சுற்றில் தென்னாபிரிக்க அணி 104 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
சிட்னியில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்காக ரெசொவ் 56 பந்துகளில் 7 பெளண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 109 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது அவர் குவன்டன் டி கொக்குடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 163 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இது உலகக் கிண்ண வரலாற்றில அதிகூடிய இணைப்பாட்டமாகும்.
பின்னர் அதிரடியாக பந்துவீசிய அன்ரிச் நோர்ட்ஜே 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்த நிலையில் பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது.
டி20 உலகக் கிண்ணத்தில் ஐந்தாவது அதிகூடிய ஓட்டத்தை பெற்ற ரெசொவ், தென்னாபிரிக்க அணி சார்பில் முதல் சதத்தை பதிவு செய்தார்.