இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்து 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பன்னிபிட்டிய – வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் 10 வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையர்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.











Discussion about this post