ராகம பொது வைத்தியசாலையின் புற்று நோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு அண்மித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நடமாடும் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடம் அருகே காத்திருந்து மோட்டார் சைக்கிளில் குளிர்பான பெட்டியில் அடைத்து குறித்த மருந்துகளை விற்பனை செய்த நபரை உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.
புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் இவ்வகையான மருந்துகள் விற்பனை பிரதிநிதி ஒருவரால் தமக்கு வழங்கப்படுவதாகவும், குறித்த மருந்துகள் தமக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.




Discussion about this post