பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் தெரிவிக்கையில், தனது மகன் மீது இதற்கு முன்பும் பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




Discussion about this post