வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற மேலும் 37 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நேற்று(11) கைதிகள் சிலர் தப்பியோடியதை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Discussion about this post