தென் மாகாணத்தில் 22 அரச பாடசாலைகள் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த 22 பாடசாலைகளில் மாத்தறை நகரில் மட்டும் 5 பாடசாலைகள் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




Discussion about this post