பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக கட்டாயகமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




Discussion about this post