யாழில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர் எனவும், மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவ்வாறு பிணையில் விடுவிக்கப்படுபவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Discussion about this post