லொறியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி பகுதியயைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்ற கலீல் அஹமட் மொஹமட் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவன், நண்பனிடம் மோட்டார் சைக்கிளை கேட்டுக்கொண்டு சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லொறி மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது மாணவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.












Discussion about this post