யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.











Discussion about this post