2023 டிசம்பரில் தேசிய மக்கள் சக்திக்கு ஏனைய கட்சிகளை விடஅதிகளவு ஆதரவு காணப் பட்டமை கருத்துக்கணிப் பொன்றின் மூலம் தெரியவந் துள்ளது.
‘இன்ஸ்ரிரியூட் ஒவ் ஹெல்த் பொலிசி’ என்ற நிறுவனம் தேர்தலில் வாக் களிக்கும் நோக்கம் குறித்து வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு 39 வீதமா னவர்கள் தங்கள் ஆதரவை வெளி யிட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக் திக்கு 27 வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறு வீத ஆதரவும், மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பத்து வீத ஆதரவும் காணப்படுவதை கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு மூன்று வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு
2022 முதல் அதிகரித்து வருவதை இந்த கருத்துக்கணிப்பு புலப்படுத் துகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் தனது ஆதரவை அதிகரித்துள்ளது. ஆனால் மந்தகதியில் இந்த ஆ ரவு அதிகரிப்பு காணப்படுகின்றது என கருத்துக் கணிப்பினை மேற்கொண்ட அமைப்பு தெரிவித் துள்ளது.
2022 முதல் ஐக்கியமக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் காணப்ப டுகின்றது .
டிசம்பர் 2023 கருத்துச் கணிப்புகள் ஐக்கிய தேசிய கட்சி க்கான ஆதரவு தொடர்ந்தும் வீழ்ச்சிய டைவதை காண்பிக்கின்றன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.











Discussion about this post