நுவரெலியா – ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்கு வழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து எழுந்த முறைப்பாடுகளை அடுத்து நானுஓயா பொலிஸாரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா- ஹட்டன் குறுக்கு வழியில் வீதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை அந்த வீதியில் பொலிஸார் இல்லாத வேளையில் கனரக வாகனங்களை இரகசியமாக பயன்படுத்தும்போது பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தது.
அங்கு பொருத்தப்பட்டுள்ள பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக தொடர்ந்தும் செயற்பட்டால், சாரதியை வாகனத்துடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என தெரிவித்தனர்.











Discussion about this post