12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 210 – 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு தொகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்ற தகவலை அடுத்து வர்த்தகர்கள் எரிவாயுவை பதிவு செய்வதில் இருந்து விலகியுள்ளதால் சில இடங்களில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவியதாக லிட்ரோ நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.












Discussion about this post