SLPP தேசிய அமைப்பாளராக நாமல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னர் அவரது மாமாவும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். (நிவ)




Discussion about this post