டித்வா சூறாவளி காரணமாக தடைபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, கால்நடை வைத்திய விஞ்ஞான பீடம், விவசாய பீடம் மற்றும் பல் மருத்துவ விஞ்ஞான பீடம் என்பன மீண்டும் திறக்கப்படும் என பல்லைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026 ஜனவரி 05ஆம் திகதி விஞ்ஞானம் மற்றும் கலை பீடங்களை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன.முகாமைத்துவ பீடத்தை மீண்டும் திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லைஅனர்த்தத்தினால் சேதமடைந்த பல்கலைக்கழக சொத்துக்களை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பல்லைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.











Discussion about this post