மோட்டார் சைக்கிளில் இடது பக்கம் செல்வதற்கு பதிலாக வலது பக்கமாக சென்ற இளைஞனுக்கு ரூபா 15,000 அபராதம்.
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரை சேர்ந்த வயது (21) இளைஞனுக்கு போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கந்தளாய் நீதிமன்றம் ரூபா 15000 அபராதம் விதித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 97ம் கட்டை சிராஜ் நகர் சந்தியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வலது பக்கத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு இடது பக்கமாக சென்று திரும்ப வேண்டும் என்ற நிலையில் வலது பக்கத்தில் சென்ற போது போக்குவரத்து பொலிஸாரினால் நீதிமன்றம் செல்வதற்கான அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த இளைஞன் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் (14) ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த குற்றத்துக்காக ரூபா 15000.00 தண்டப்பணம் விதிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இது போன்ற குற்றங்களுக்கான சரியான தண்டனைகளை ஏனைய சிறிய சிறிய குற்றங்களுக்காக போக்குவரத்து பொலிஸாரினால் கடமையை சரியாக செய்தால் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன் .
இவ்வாறாக போக்குவரத்து பொலிஸார் தங்களது கடமையின் போது சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற வகையில் பாரபட்சமின்றி எவராக இருந்தாலும் இது போன்ற சட்ட நடவடிக்கைகளை இனமத பேதமின்றி செயற்பட்டால் இலஞ்ச ஊழல் மோசடியற்ற நாட்டை உருவாக்க முடியும்.












Discussion about this post