அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் திங்களன்று (26) ஒரு பெரிய குளிர்காலப் புயல் அதிக பனியைக் குவித்து, தெற்கின் சில பகுதிகளை மூடியது.
இதனால், அமெரிக்கார்கள் பலர் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலை மற்றும் மின்சாரமின்றி மற்றொரு இரவை எதிர்கொண்டனர்.
கடுமையான குளிரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குறைந்தது 30 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்கன்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரை 1,300 மைல் நீளமுள்ள ஆழமான பனிப்பொழிவால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தன, விமானங்கள் இரத்து செய்யப்பட்டன மற்றும் திங்கட்கிழமை பரந்த அளவிலான பாடசாலைகள் மூடப்பட்டன.
பிட்ஸ்பர்க்கின் வடக்கே உள்ள பகுதிகளில் 20 அங்குலம் வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும், திங்கள்கிழமை பிற்பகுதி முதல் செவ்வாய் வரை மைனஸ் 25 டிகிரி பாரன்ஹீட் வரை குறைந்த காற்று குளிரை எதிர்கொண்டதாகவும் தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை மாலையில் நாடு முழுவதும் 560,000க்கும் மேற்பட்ட மின்வெட்டுகள் ஏற்பட்டதாக poweroutage.com தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை தெற்கில் இருந்தன, அங்கு வார இறுதி நாட்களில் ஏற்பட்ட உறைபனி மழையால் மரக்கிளைகள் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன, இதனால் வடக்கு மிசிசிப்பி மற்றும் டென்னசியின் சில பகுதிகளில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது.
மின்சாரம் மீண்டும் கிடைக்க பல நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.











Discussion about this post