கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்.
கொழும்பு மாநகரசபையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகள் காரணமாக, மாநகரசபையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சிக்கல்கள் குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் திரும்பியுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, கொழும்பு மாநகர முதல்வர் வ்ராயி கலி பல்தசார் மற்றும் மாநகரசபையின் பொறியாளர் சங்கம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இதன்போது மாநகரசபையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பொறியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்முறைச் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு








Discussion about this post