சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின் டார்டஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை படகு மூழ்கியபோது அதில் 120 முதல் 150 பேர் வரை பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை, ஆனால் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் மீட்பு முயற்சி நடந்து வருகிறது.
லெபனான் துறைமுக நகரமான திரிபோலிக்கு அருகிலுள்ள மின்யேஹ் நகரிலிருந்து கப்பல் புறப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மூழ்கியதாக நம்பப்படும் படகில், லெபனான், சிரிய மற்றும் பாலஸ்தீனிய நாட்டினர் பயணித்ததாக கூறப்படுகின்றது. இதில், சில பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குகின்றனர்.
லெபனானில் 1.5 மில்லியன் சிரிய அகதிகளும், மற்ற நாடுகளைச் சேர்ந்த 14,000 அகதிகளும் இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அகதிகள்இங்கு வசிக்கின்றனர்.
எவ்வாறாயினும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, கொவிட்-19 மற்றும் 2020 பெய்ரூட் துறைமுக வெடிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டது, 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் மருந்துகளை வாங்க சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலைமை நாட்டின் புலம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அவர்களில் பலர் ஐரோப்பா உட்பட வேறு இடங்களுக்கு தப்பிச் செல்லத் தேர்வு செய்கிறார்கள்.
இந்த மாத தொடக்கத்தில், லெபனானில் இருந்து ஐரோப்பாவுக்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு துருக்கியின் கடற்கரையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நான்கு படகுகளில் இருந்து 73 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
Discussion about this post