பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000லிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Discussion about this post