இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
கராச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் டக்கெட் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், தானி மற்றும் ஹரீஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நவாஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.3 ஒவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி, வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது, பாபர் அசாம் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டார்.
Discussion about this post